சென்னை: திருப்போரூர் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜியை ஆதரித்து திருக்கழுக்குன்றத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜியை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார். பின்னர், திருமாவளவன் பேசியதாவது:எடப்பாடி பழனிசாமியை பாமக, பாஜ உள்ளிட்ட இதர கட்சிகள் எவ்வளவு தரக்குறைவாக பேச வேண்டுமோ, அவ்வளவு தரக்குறைவாக பேசினார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனாலும், இது தேர்தல் நேரம் என்பதால் விமர்சனம் செய்த கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, கைக்கோர்த்து கூட்டணி அமைத்துள்ளது.