பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா...! தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்ட 2 நாட்களில் தொற்று உறுதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இம்ரான் கான், வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அவர் கடந்த 2018 இல் பிரதமராக தேர்வாகி இருந்தார்.  இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் உள்ள பிரதமருக்கே கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை எண்ணி பாகிஸ்தான் மக்கள் கவலை கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்ட இரண்டு தினங்களில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் எடுத்துக் கொண்ட கொரோனா தடுப்பூசி சீனாவின் சினோபார்ம். தற்போது பிரதமர் தன்னை வீட்டிலேயே தனிமை படுத்திக் கொண்டிருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. சுமார் 21 கோடிக்கு மேலான மக்கள் வசிக்கும் அந்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது.

Related Stories: