உத்திரமேரூர் அருகே சாலவாக்கத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே சாலவாக்கம் கிராமத்தில் திமுக வேட்பாளர் க.சுந்தரை ஆதரித்து மதிமுக பொது செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசியதாவது: தமிழகத்தில் ஜனவரி 26 மற்றும் அக்டோப்ர் 2 ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தவில்லை. ஆனாலும், மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சோப லட்சம் மக்களை கூட்டினார். மக்கள் சபை கூட்டம் என்று கூட்டினார். ‘எல்லோரும் நம்மோடு’ என்ற திட்டத்திலும், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’, ‘விடியலை நோக்கி ஸ்டாலின்’ என்ற திட்டங்கள் மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் 10 ஆண்டுகளில் தொலைதூர திட்டங்களில் பொருளாதாரம், வேளாண்மை, க்ல்வி, சுகாதாரம், நகர்புற வளர்ச்சி, ஊரக உள்கட்டமைப்பு, சமூக நீதி ஆகிய துறைகளில் பல்வேறு சிறந்த திட்டங்களை வகுத்துள்ளார். இதுமட்டுமின்றி தனிநபர் வருமானம் ₹4 லட்சமாக உயர்த்தப்படும் என ஒவ்வொரு ஆண்டும் ₹10 லட்சம் புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்றார். அனைத்து ஊராட்சிகளிலும் முன்மாதிரி பள்ளிகளும் முன்மாதிரி மருத்துவமனைகளும் உருவாக்கி தரமானதாக இலவசமாக வழங்கப்படும்.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் குடிநீர் வசதி செய்து தரப்படும், நகர்புறங்களில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு 20 லட்சம் கான்கிரீட்  வீடுகள் கட்டித்தரப்படும், குடும்பத் தலைவிக்கு ₹1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த 7 வாக்குறுதிகள் நிறைவேற் உங்கள் தொகுதியில் போட்டியிடும் க.சுந்தரை, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: