2வது முறையாக சீமான் வேட்பு மனுதாக்கல்

சென்னை: திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான்  வேட்பு மனுவில் ஆண்டு வருமானம் ரூபாய் 1000 என பதிவிட்டதால் அவரது வழக்கறிஞர் மீண்டும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 15ம் தேதி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது வேட்பு மனுவுடன் சீமானின் ஆண்டு வருமானம் ஆயிரம் மட்டுமே என்று தாக்கல் செய்து உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். இது அவர்களது ஆதரவாளர்கள் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து அவருக்கு ஆண்டு வருமானம் 2 லட்சத்து 60 ஆயிரம் என திருத்தி அவரது பெயரில் சீமானின் வழக்கறிஞர்  மீண்டும் ஒரு வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

Related Stories: