திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து எடிட் செய்த அதிமுக: திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்

* திமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து அதிமுக எடிட் செய்துள்ளதா?

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டு அதை பத்திரிகையாளர் உள்பட அனைவருக்கும் கொடுத்தனர். ஸ்பைரல் பைண்டிங் பண்ணியதை மட்டுமே கொடுத்துள்ளனர். ஒரிஜினல் பைண்டிங் பண்ணியதை வழங்கவில்லை. அதில் 165வது அறிவிப்பில், ஒரிஜினல் அறிவிப்புக்கு மேல் ஸ்டிக்கரை போட்டு ஒட்டி, அதற்கு மேல், ‘சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும். அதில் இடஒதுக்கீடு கொடுப்போம்’ என்று கூறியுள்ளனர். ஒரிஜினலில் இது இல்லை.  அடுத்ததாக உள்ளுக்குள் வாக்குறுதி கொடுத்துள்ளனர். அதில், ஒரு இடத்தில் கூட்டுறவு கடன்கள், கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்கள் ரத்து என்று மட்டும் சொல்லியுள்ளனர். ஆனால் ஸ்டிக்கர் ஒட்டி அதற்கு மேல், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் ரத்து என்று சேர்த்து கூறியுள்ளனர். அறிவிப்பு 163ல் ஒரிஜினலில் பத்திரிகையாளர் நலன் என்பது மட்டுமே தலைப்பு. ஸ்டிக்கர் ஒட்டி அதற்கு மேல் பத்திரிகையாளர் நலன்- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு என்று கூறியுள்ளனர். ஒரிஜினல் எது என்பது மக்களுக்கு தெரியாது. முந்தைய நாள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை அப்படியே கலர் ஜெராக்ஸ் எடுத்து எடிட் பண்ணியுள்ளனர்.

* அதிமுக அறிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நடைமுறைக்கு சாத்தியமா?

ஜெயலலிதா இருக்கும் போதே அவங்க சொன்னதையே நிறைவேற்ற முடியாமல் 5.8லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளனர். அப்படி இருக்கும் போது இப்போது அறிவித்துள்ள வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவார்கள்.

* ஊழல் குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்களுக்கு அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதே?

இரண்டு பேர் நடந்து செல்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒருவர் பாக்கெட்டில் ஒருவர் கையை விட்டு செல்கிறார்கள். அவர்களை பார்த்தவர்கள் இருவரும் இணைபிரியாத ஆத்மாத்ம நண்பர்கள் என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் முதல் திருடன் சொல்கிறான், பாக்கெட்டில் இருந்து கையை எடுத்தால் அவன் ஓடிவிடுவான். மற்றவனிடம் கேட்டாலும் அதே பதிலை சொல்கிறான். அந்த மாதிரி முதல்வர் பழனிச்சாமி 33வது அமைச்சர் வரை யாரையும் விட்டுக் கொடுத்து விட முடியாது. அதனால் இவர்கள் எல்லாரும் இணைந்து நடப்பது போன்று தெரியும். அதனால் அவர்களுக்கு சீட் வழங்கியுள்ளனர். யாரை விட்டாலும் மீதி 32 பேருக்கும் ஆபத்து. நீ என்ன யோக்கியனா என்று கேட்பார்கள்.

* பாஜகவின் அடிமையாக அதிமுக தலைவர்கள் செயல்படுகிறார்கள் என விமர்சனங்கள் தொடர்ந்து எழுகிறதே?

 முதல்வர் பழனிச்சாமி. இப்போது தேர்தல் அறிக்கையில், என்பிஆர், சிஏஏவை எல்லாம் வாபஸ் பெற செய்வேன் என்று கூறியுள்ளார். அதற்கு பதில் கூறிய பாஜ தேசிய செயலாளர் சி.டி.ரவி,‘‘ நாங்கள் அதை நடைமுறைபடுத்தியே தீருவோம். அந்த வாக்குறுதியை அதிமுக தேர்தல் அறிக்கையில் இருந்து எடுக்கக் சொல்லிவிடுவோம் என்கிறார். ஜெயலலிதா இருந்திருந்தால், சி.டி.ரவி இப்படி பேசுவாரா?. நீங்கள் அடிமையாக இருப்பதால் தான் அவர் இப்படி பேசுகிறார்.  

Related Stories: