பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் சிபிசிஐடி தரப்பில் சீலிட்ட அறிக்கை தாக்கல்: சிறப்பு டிஜிபி மீது என்ன நடவடிக்கை: அரசுக்கு ஐகோர்ட் மீண்டும் கேள்வி

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பியான கே.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.ஏற்கனவே, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை நியாயமாக விசாரித்து தீர்த்து வைக்க வேண்டிய கடமை நீதிமன்றத்துக்கு உள்ளது. பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாலமாக செயல்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்.

ஆனால் புகார் அளிக்க வந்த பெண் அதிகாரியை தடுத்தார் என எஸ்.பி.யை மட்டும் சஸ்பெண்ட் செய்தது ஏன்.பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை மார்ச் 16ல்  சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும் என்றார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வக்கீல் ரியாஸ் ஆஜராகி, ஒரு சீலிட்ட கவரில் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் குற்ற வழக்கின் விசாரணை குறித்து அறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து, சம்மந்தப்பட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசிடம் கேட்டு சொல்லுங்கள் என்று அரசு வக்கீலுக்கு அறிவுறுத்திய நீதிபதி விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: