புதிய வங்கியின் பெயரில் கணக்கு விபரங்கள் மாற்றம்: 7 வங்கிகளின் காசோலை ஏப்ரல் 1லிருந்து செல்லாது

புதுடெல்லி: வங்கிகள் இணைப்பு முறை நடைமுறைக்கு வருவதால் வருகிற ஏப். 1ம் தேதி முதல் 7 வங்கிகளின் காசோலை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கித் துறையை மேம்படுத்துவதற்காக 10 பொதுத் துறை வங்கிகளை  நான்கு பெரிய வங்கிகளாக மத்திய அரசு இணைத்துள்ளது. தேனா மற்றும் விஜயா வங்கி ஏப்ரல் 1, 2019 அன்று பாங்க் ஆப் பரோடாவுடன் இணைந்தன. ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா  ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கி உடன் இணைக்கப்பட்டன. சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது. ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்தன. அலகாபாத் வங்கியானது  இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் காசோலைகள், ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு வழங்குவதில் இணைக்கப்பட்ட புதிய வங்கி அதற்கான பிரத்தியேகமான காசோலைகள், இணைக்கப்பட்ட வங்கி நிறுவனம் புதிய  காசோலை புத்தகங்கள், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்கும். ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும் என்பதால், அதுவரையில் பழைய கார்டுகளையே பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.  

இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் இணைக்கப்பட்ட வங்கிகளின் பழைய காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள ஓபிசி, யுனைடெட் பாங் ஆஃப் இந்தியா,  விஜயா வங்கி, அலகாபாத் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய 7 வங்கிகளின் காசோலை புத்தகங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் செல்லாது. இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களது தற்போதைய  காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புக்குகளை மார்ச் 31 வரை மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போதுள்ள காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புக்குகள் செல்லாமல் போன பிறகு, வாடிக்கையாளர்களின் கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி,  எம்.ஐ.சி.ஆர் குறியீடு, கிளை முகவரி, காசோலை புத்தகம், பாஸ் புக் ஆகியன மாற்றப்படும்.

Related Stories: