குளித்தலை அடுத்த அய்யர்மலை அரசு கலை கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

குளித்தலை : கரூர் மாவட்டம் அய்யர்மலை அரசு கலை கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய பேரணி நடைபெற்றது.

இதில் கட்டாயம் அனைவரும் ஜனநாயக கடமையில் ஒன்றான தேர்தல் அன்று வாக்களிக்க வேண்டும். வாக்குச் சாவடிகளுக்கு செல்லும்பொழுது முக கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் கிருமிநாசினி தெளித்துக் கொண்டு வாக்கு சாவடி மையத்துக்கு செல்ல வேண்டும் போன்றவை  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.

 

இப்பேரணியில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், செஞ்சிலுவை மாணவர்கள் மற்றும் அனைத்து துறை மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு அய்யர்மலை பகுதியை சுற்றியுள்ள தெருக்கள், வீடுகள் போன்ற பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

இப்பேரணிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் பெரியசாமி, முனைவர் புவனேஸ்வரி, செஞ்சிலுவை சங்க அலுவலர் பத்மப்ரியா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: