செங்கை, காஞ்சி மாவட்ட தொகுதிகளில் அனைத்து கட்சி வேட்பாளர் பயோடேட்டா

காஞ்சிபுரம்: தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியை, அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் விவரம் வருமாறு.காஞ்சிபுரம் தொகுதி பாமககாஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக, அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் மகேஷ்குமார் (40) அறிவிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம், மேல் பேரமநல்லூர் பகுதி, ஆற்றங்கரை தெருவில் வசிக்கிறார். இவரது பெற்றோர் பெருமாள், ரத்தினம்மாள். பி.காம், எல்எல்பி முடித்துள்ள மகேஷ்குமார், விவசாயத்தை சொந்த தொழிலாக செய்து வருகிறார். இவரது மனைவி பிரசன்னகுமாரி. இவர்களுக்கு அர்ஷிதா என்ற மகளும்,  தர்ஷன் என்ற மகனும் உள்ளனர். தற்போது பாமக மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார்.

திருப்போரூர் தொகுதி

பாமகதிருப்போரூர் தொகுதி பாமக வேட்பாளராக திருக்கச்சூர் ஆறுமுகம் (63) அறிவிக்கப்பட்டுள்ளார். பி.எஸ்சி. வேதியியல் பட்டம் பெற்றுள்ளார். தற்போது, திருக்கச்சூர், விஐபி நகர் 7வது தெருவில் வசிக்கிறார். இவரது மனைவி சசிகலா. சசிகலா (முன்னாள் மறைமலைநகர் நகராட்சி தலைவர்). இவர்களுக்கு அருண்முருகன் (இன்ஜினியர்) என்ற மகனும், ஹேமலதா, லதாபிரியா (டாக்டர்கள்) ஆகிய மகள்களும் உள்ளனர்.தொடக்கத்தில் பாமக மாவட்ட செயலாளராக இருந்து, தற்போது மாநில துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். 2001- 2011 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் செங்கல்பட்டு எம்எல்ஏவாக இருந்தார். 2011ல் திருப்போரூர் தொகுதியிலும், 2016ல் செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

திருப்போரூர் தொகுதி அமமுக

திருப்போரூர்  தொகுதி அமமுக வேட்பாள ராக வி.கோதண்டபாணி (62) அறிவிக்கப் பட்டுள்ளார். எம்ஏ, எல்எல்பி படித்துள்ளார். மாமல்லபுரம் அடுத்த அம்பாள் நகரில் வசிக்கிறார். இவரது மனைவி சுகந்த குந்தலாம்பிகை. வி.கோதண்டபாணி, கடந்த 1988 முதல் 2005 வரை அதிமுக மாமல்லபுரம் நகர செயலாளர், பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருந்துள்ளார். 2011 முதல் 2016 வரை மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர்,  தலசயன பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர், மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டு 950 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 22 எம்எல்ஏக்களில் ஒருவராக திகழ்ந்தார். இதையடுத்து 2019ல் நடந்த இடைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது, அமமுக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளராகவும், முழு நேர அரசியல்வாதியாகவும் உள்ளார்.

மதுராந்தகம் தொகுதி மதிமுக

மதுராந்தகம்  தொகுதி மதிமுக வேட்பாளராக மல்லை சத்யா (52) அறிவிக்கப்பட்டுள்ளார்.  எம்.ஏ. பட்டதாரி. இவரது  சொந்த ஊர் சாலவாக்கம் அடுத்த குறும்பிறை. தற்போது மாமல்லபுரம் அண்ணாநகர் நகரில் வசிக்கிறார். இவரது மனைவி துர்காசினி. இவர்களுக்கு கிர்த்திவர்மன் என்ற மகனும், கண்ணகி என்ற மகளும் உள்ளனர்.

மாநில துணை பொதுச் செயலாளராக உள்ள இவர், ஏற்கனவே கட்சியில் பேரூர் செயலாளர்,  மாவட்ட துணை செயலாளர், மாநில இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார்.

1996ல் மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற தலைவர், 1996 மற்றும் 2016ல் திருப்போரூர்  சட்டமன்ற தேர்தலில், 2001  சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியிலும், 2011ல் எழும்பூர் தொகுதியிலும், 2014ல் காஞ்சிபுரம்  மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். மாமல்லபுரம் மல்லை தமிழ் சங்கத்தலைவர் மற்றும் குங்பூ அகடாமியின் ஆசிய கண்ட தலைவராகவும் உள்ளார்.

Related Stories: