காங்.,சின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: அரியானா மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்தது பாஜக கூட்டணி அரசு.!!!!

சண்டிகர்: அரியானா சட்டப்பேரவையில் பாஜ கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்நது. அரியானாவில் பாஜ-ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜகவை சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதல்வராக உள்ளார். ஜேஜேபி கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராக உள்ளார். இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் காரணமாக பாஜ மீது ஜேஜேபி அதிருப்தியில் உள்ளது.

இந்நிலையில், பாஜ கூட்டணி அரசு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், மக்களின் நம்பிக்கையை அரசு இழந்து விட்டதாகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸ் விடுத்தது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு அம்மாநில சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது சட்டப்பேரவையில் காரசார விவாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, மனோகர் லால் கட்டார் அரசு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாலை 5 மணியளவில் நடைபெற்றது.  

இதில், பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவாக 55 சட்டமன்ற உறுப்பினர்களும், எதிராக 32 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம்,

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது. முதல்வர் பதவியை மனோகர் லால் கட்டார் தக்க வைத்துக்கொண்டார்.

90 எம்எல்ஏக்களை கொண்ட அரியானா சட்டப்பேரவையில் பாஜ 40, ஜேஜேபி 10 எம்எல்ஏக்களுடன் கூட்டணி ஆட்சி செய்கின்றன. காங்கிரஸ் 30 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. 7 சுயேச்சைகளில் 5 பேரும், அரியானா லோகித் கட்சியின் ஒரு எம்எல்ஏவும் பாஜ அரசுக்கு ஆதரவு அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: