சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக திருவள்ளுர் மாவட்டத்தில் கட்டப்பட்ட 5வது நீர்த்தேக்கம் நிரம்பியது

திருவள்ளுர்: கிருஷ்ணா நதி நீரை தேக்கி வைப்பதற்காக அமைக்கப்பட்ட கண்ணன் கோட்டை நீர் தேக்கம் முதன்முறையாக அதன் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக திருவள்ளுர் மாவட்டம் குமுடிப்பூண்டியை அடுத்த கண்ணன் கோட்டையில் 5-வதாக நீர் தேக்கம் அமைக்கப்பட்டது.

 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்கும் வகையில் 1485 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கம் கடந்த நவம்பர் மாதம் 21-ம் தேதி மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவால் காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. கிருஷ்ணா நதி நீர் வரத்து மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நீர்த்தேக்கம் நிரம்பி வந்த நிலையில் தனது முழுகொள்ளளவான 500 மில்லியன் கன அடியை இன்று எட்டியது.

நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த 5 மாதங்களிலேயே கண்ணன் கோட்டை நீர்த்தேக்கம் முழுகொள்ளளவை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நீர்தேக்கத்திற்கு 5 கனஅடி கிருஷ்ணாநதி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Related Stories: