அமராவதி அணை பூங்காவில் புதர்கள் வெட்டி அகற்றம்

உடுமலை : தினகரன் செய்தி எதிரொலியாக அமராவதி அணை பூங்காவில் உள்ள புதர்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.

உடுமலை அருகே அமராவதி அணை, பூங்கா, முதலை பண்ணை உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் முதலை பண்ணை உரிய முறையில் பராமரிக்கப்படுகிறது. அமராவதி அணை பூங்கா புதர் மண்டி கிடந்தது.

அணையில் படகு சவாரி துவக்கப்பட்ட நிலையில், படகு இல்லத்துக்கு பூங்கா வழியாக செல்லும் பாதையிலும் குப்பைகள் குவிந்து கிடந்தன. பூங்காவுக்குள் செல்ல நுழைவு கட்டணமும் வசூலிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். பராமரிப்பில்லாத பூங்காவுக்கு கட்டணம் வசூலிக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுபற்றிய செய்தி கடந்த பிப்ரவரி 24தேதி படத்துடன் தினகரன் நாளிதழில் வெளியானது.இதைத்தொடர்ந்து தற்போது பூங்காவில் புதர்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. வழித்தடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. பூங்கா சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

 இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இருப்பினும், பூங்கா மேம்பாட்டு பணிகளை விரைந்து மேற்கொண்டு முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: