தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் தபால் ஓட்டு

தபால் ஓட்டு… என்ற பெயரைக் கேட்டாலே இன்று எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த நடைமுறையை, தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்த திருத்தங்கள் கேலிக்கூத்தாக்கி உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா பாதித்தவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டோர், அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் என்று ‘தபால் வாக்கு’ போடும் வாய்ப்பு உள்ளவர்களுக்கான வரையறை வகைதொகையில்லாமல் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தப் புதிய திருத்தங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதே எதிர்க்கட்சிகளின் அச்சமாக உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் இந்த அச்சத்துக்கு அச்சாரமாக உள்ளன. லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி தலைமையிலான மகாகத்பந்தன் மகத்தான வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐக்கிய ஜனதா தளம் பாஜ கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. இந்த அதிர்ச்சி முடிவுக்கு தபால் வாக்கு தகிடுதத்தமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

அதிலும், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முடிவு தீர்மானிக்கப்பட்ட தொகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. ஆளும்கட்சிக்கு எதிராகப் பதிவான தபால் வாக்குகளை செல்லாதவையாக அறிவிப்பது, கொரோனா நோயாளிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை நேரில் சென்று தனித் தனியாக சந்தித்து ‘நன்கு கவனிப்பதற்கான’ வாய்ப்பு உட்பட பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் இந்த திருத்தங்கள் குறித்த நான்கு கோண அலசல்:

Related Stories: