பொதுச்சுவரில் போஸ்டர் ஒட்டியதை தடுத்த எஸ்ஐக்கு பாஜ மிரட்டல்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி சட்டமன்ற தொகுதியை ஆரம்பம் முதலே பாஜ கேட்டு பிடிவாதம் செய்து வருகிறது. வேல் யாத்திரை, பொதுக்கூட்டம் போன்றவற்றில் பழநி தொகுதி தங்களுக்குத்தான் என்ற உறுதிக் குரல்கள் பாஜ நிர்வாகிகளால் முன்மொழியப்பட்டதால் அதிமுகவினர் அப்செட்டாகினர். இதனால் அதிமுகவினர் விரக்தி அடைந்துள்ளனர். பழநி புறநகர், சிவகிரிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ராமநாத நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான மின்மோட்டார் சுவரில் பாஜ சார்பில் மோடி மற்றும் பாஜ நிர்வாகிகள் படம் பொறிக்கப்பட்ட போஸ்டரை பாஜவினர் ஒட்டி உள்ளனர்.

அப்போது ரோந்துப்பணிக்கு வந்த அடிவாரம் போலீஸ் எஸ்ஐ பத்ரா, தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி போஸ்டரை அகற்ற சொல்லி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜ நிர்வாகிகள், எஸ்ஐ பத்ராவை மிரட்டி பேசி, கோஷமிட்டுள்ளனர். இதனை படம் எடுத்த சிலர், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எஸ்ஐயை மிரட்டிய பாஜ நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: