சில்லி பாயின்ட்

* சுவிட்சர்லாந்தின்  பசேல்  நகரில்  சர்வதேச சுவிஸ் ஓபன் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. அதன் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நேற்று இந்தியாவின் பி.வி.சிந்து, அமெரிக்காவின் ஐரிஸ் வாங்கை  21-13, 21-14 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 21-18, 17-21, 21-13 என்ற புள்ளிகள் கணக்கில்  டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெமக்கையும்,  மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி காந்த் 21-10, 14-21, 21-14 என்ற கணக்கில்  பிரான்சின் தாமஸ் ரவுசலையும் வீழ்த்தி  காலிறுதிக்குள் நுழைந்தனர்.

* கத்தார் தலைநகர் தோஹாவில்  நடக்கும் டபிள்யூடிடி டேபிள் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்  இந்திய வீரர் சரத் கமல்  நேற்று , தைவான் வீரர் லின் யூன் ஜூவுடன் மோதினார். அதில் தைவான் வீரர் 3-0 என்ற நேர் செட்களில் வென்றார்.

* கத்தார் டோட்டல் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்ரையர் பிரிவு முதல் அரையிறுதியில்  சானியா மிர்சா(இந்தியா)/ஆந்த்ரேனா கிலேபாக்(ஸ்லோவேனியா) ஜோடியிடம்  நிகோல் மெலிசர்(அமெரிக்கா)டெமி ஸ்கெவுர்ஸ்(நெதர்லாந்து) ஜோடி 7-5, 2-6, 10-5 என்ற புள்ளி கணக்கில்  போராடி வென்றது.

Related Stories: