கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

சின்னசேலம்: கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் மேற்பார்வையில் கரியாலூர் தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் எழுத்தூர், எட்டரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சாராய ரெய்டு செய்தனர். அப்போது, எட்டரைப்பட்டி கிராம ஓடையில் சுப்பிரமணியன் என்பவர் சாராயம் காய்ச்ச சுமார் 10 பேரல்களில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து ரவிக்குமார் எஸ்ஐ மற்றும் போலீசார், பேரல்களை சேதப்படுத்தி சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்தனர்.

கல்வராயன்மலைப்பகுதியில் தற்போது மழையின்மையால் ஓடைகளில் நீர்வரத்து குறைந்து விட்டதாலும், பெரும்பாலான சாராய வியாபாரிகள் அத்தொழிலை விட்டு திருந்தி, பிழைப்பு தேடி வெளி மாநிலத்திற்கு சென்று விட்டதாலும், போலீசார் தொடர்ந்து ரெய்டு செய்வதாலும் கல்வராயன்மலையில் தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சுவது குறைந்துள்ளது. இருப்பினும் கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ கடும் நடவடிக்கை எடுப்பதுடன் குண்டர் சட்டம் பாயும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>