உத்திரமேரூரில் போலீசார் துணை ராணுவம் அணிவகுப்பு

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன், உத்திரமேரூர் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பொதுமக்களிடம் அச்சத்தை போக்கவும், சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதை உறுதி செய்யவும் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. அணிவகுப்பில் உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமை வகித்தார். அணிவகுப்பு உத்திரமேரூர் பேரூராட்சி, திருப்புலிவனம், மானாம்பதி, பெருநகர் ஆகிய பகுதிகளில் நடந்தது.

Related Stories:

>