தாம்பரம் 3வது அகல ரயில் பாதை பணிகள் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை விரைவு ரயில்கள் சென்னை செல்லாது: செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும் என அறிவிப்பு

நெல்லை: தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே மூன்றாவது  அகல ரயில் பாதை பணிகள் நடைபெற இருப்பதால் கன்னியாகுமரி, நெல்லை விரைவு ரயில்கள் சென்னை செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கூறியிருப்பதாவது:கன்னியாகுமரி - சென்னை (வண்டி எண் 02634) அதிவிரைவு சிறப்பு ரயில் மார்ச் 19ம் தேதி செங்கல்பட்டு - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் மார்ச் 19ம் தேதி குருவாயூரில் இருந்து புறப்படும் (வண்டி எண் 06128) குருவாயூர் - சென்னை சிறப்பு ரயில் விழுப்புரம் - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 19 மற்றும் 20ம் தேதிகளில் நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை - சென்னை நெல்லை சிறப்பு ரயில் (வண்டி எண் 02632) செங்கல்பட்டு - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மார்ச் 20ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் சென்னை - தூத்துக்குடி முத்துநகர் சிறப்பு ரயில்(வண்டி எண் 02693), சென்னை - கொல்லம் அனந்தபுரி சிறப்பு ரயில் (வண்டி எண் 06723) ஆகியவை சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 21ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் சென்னை - திருச்செந்தூர் செந்தூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06105) மற்றும் சென்னை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06851) ஆகியவை சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மார்ச் 20ம் தேதி மற்றும் 21ம் தேதிகளில் சென்னையிலிருந்து புறப்படும் சென்னை - செங்கோட்டை பொதிகை சிறப்பு ரயில் (வண்டி எண் 02661) சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 21ம் தேதி சென்னையிலிருந்து புறப்படும் சென்னை - குருவாயூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06127) சென்னை - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மார்ச் 20ம் தேதி புறப்படும் வண்டி எண் 02694 தூத்துக்குடி - சென்னை முத்துநகர் சிறப்பு ரயில், வண்டி எண் 06724 கொல்லம் - சென்னை அனந்தபுரி சிறப்பு ரயில், வண்டி எண் 06106 திருச்செந்தூர் - சென்னை செந்தூர் சிறப்பு ரயில் ஆகியவை வழக்கமான தாம்பரம், மாம்பலம் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக காஞ்சிபுரம், திருத்தணி வழியாக இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories:

>