சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 2வது நாளாக நேர்க்காணல்

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக நேர்க்காணல் நடத்தி வருகிறார். திமுகவின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறமும், தேர்தலில் போட்டியிட விரும்பி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்க்காணலும் நடைபெறுகிறது.

நேற்று தொடங்கிய நேர்க்காணலில் நேற்று மட்டும் சுமார் 1,400 பேர் சுமார் 40 தொகுதிகளுக்கான அளவில் பங்கேற்பார்கள் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த இலக்கை பூர்த்தி செய்ய முடியவில்லை. காரணம் விண்ணப்பித்த ஒவ்வோரிடமும் வெற்றி வாய்ப்பு குறித்த ஆலோசனை மிகவும் ஆராந்து எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் என்பது அதற்கு காரணமாக இருந்தது. அதன்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு நேர்க்காணல் நடத்தப்பட்ட வரிசையில் சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்டங்களுக்கு விடுப்பட்டிருந்தது.

விடுபட்ட மாவட்டங்களுக்கான நேர்க்காணல் இன்று தொடரும். இந்த விடுபட்ட மாவட்டங்களுடன் சேர்த்து இன்று மதுரை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கும், மாலையில் திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரியில் இருந்து விண்ணப்பம் அளித்தவர்களுக்கும் நேர்க்காணல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>