வேலம்மாள் பள்ளி 10ம் வகுப்பு மாணவி சதுரங்க போட்டியில் தங்கப்பதக்கம்

திருவள்ளூர்: வேலம்மாள் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவி, சதுரங்க போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நாமக்கல்லில் தமிழ்நாடு இளைஞர் கிராமப்புற விளையாட்டுக் குழு ஏற்பாடு செய்த 6வது மாநில இளைஞர் கிராமப்புற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற முகப்பேர் மேற்கு வேலம்மாள் வித்யாலயாவின் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவி பி.திருஷா சதுரங்கப் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம்ம் வென்று சாதனை படைத்தார்.

இது மாநிலம் முழுவதும் இளைஞர் கிராமப்புற விளையாட்டுகளை ஊக்குவிக்கிறது. மாணவியை பள்ளியின் தாளாளர் எம்விஎம்.வேல்மோகன், முதன்மை முதல்வர், முதல்வர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

>