குட்டி ஜப்பானில் கட்சிக்கொடி, சின்னங்கள் தயாரிப்பு பணி விறுவிறு

பட்டாசு தொழிலுக்கு மட்டுமா? அச்சுத்தொழிலுக்கும் பிரசித்தி பெற்றது ‘குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி. தற்போது தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல்  களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக சிவகாசியில் கட்சிக் கொடிகள், மினி வரவேற்பு போர்டுகள், அரசியல் கட்சி சின்னங்கள் மற்றும் தொப்பிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், கொடிகள், சின்னங்கள், தொப்பிகள் வாங்குவதற்கு சிவகாசியில் ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.

அரசியல் கட்சிகள் மற்றும்  வாக்காளர்களை கவரும் வகையில் பல வடிவங்களில் கட்சிக் கொடிகள், சின்னங்கள் சிவகாசியில் தயார் செய்ய்யப்பட்டு வருகின்றன,  விதவிதமான வடிவங்களில் விசிறிகள், தொப்பிகள், நெற்றிக்கவசம், தலைவர்கள் உருவம் பொறித்த பேட்ஜ், மினி வரவேற்பு போர்டுகள்,  கட்சித்தலைவர்களின் முகமூடிகள் என பலவிதமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சிவகாசியில் உள்ள அச்சகங்களில் இரவு, பகலாக இவற்றைத் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  சிவகாசி அச்சக உரிமையாளர் ஒருவர் கூறும்போது, ‘வழக்கமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் தலைவர்கள் பிரசாரத்தை தொடங்குவர். ஆனால் இந்த தேர்தலில் தேர்தல் அறிவிக்கும் முன்பே  பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஆர்டர்கள் குவிகின்றன.

Related Stories: