சட்டமன்ற தேர்தல் எதிரொலி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது

சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுகவுடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நேற்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. தற்போது திமுக தன் கூட்டணிகட்சிகளுடன் தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், நேந்று து மாலையில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் தமிழக காங்கிரஸ் சார்பில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: திமுக தலைவர்களோடு இடங்களை பகிர்ந்து கொள்வது பற்றி பேசியிருக்கிறோம். மிகவும் சுமூமாகவும், மிகவும் இணக்கமாகவும் பேச்சுவார்த்தை இரண்டு தரப்பில் நடந்துள்ளது. விரைவில் மேற்கொண்டு என்ன செய்வது, எப்படி நடப்பது, எவ்வளவு இடங்கள் என்பதை நாங்கள் முடிவு செய்வோம். இன்றைய கூட்டத்தின் முடிவு மிகவும் சிறப்பாக இருந்தது.

தாமதம் என்பதே இல்லை. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு இடங்கள் என்பதை ஏற்கனவே பேசி விட்டோம். நாளை அல்லது நாளை மறுநாள் நிச்சயமாக இறுதி செய்யப்பட்டு விடும். 3ம் கட்டம் பேச்சு என்பது இல்லை. எங்களுக்கு என்ன தேவை என்பதை உம்மன்சாண்டி சொல்லியிருக்கிறார். நாங்களே பேசி இனி முடிவு செய்வோம். மேலிட தலைவர்கள் யாரும் வரவில்லை. நாளைக்கு பேச்சுவார்த்தை இல்லை. நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடக்கும்.

திமுக எவ்வளவு தொகுதியில் நிற்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் எவ்வளவு தொகுதியில் போட்டியிட ஆசைப்படுகிறோம் என்பதை அவர்களிடம்  தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: