பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை: நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும்: காங். மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி.!!!

சென்னை: நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு  தொடர்பாக திமுக, காங்கிரசுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இன்று நடைபெற்ற  பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி,

திமுக உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்து உள்ளது. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து வருகிறது. நாளை அல்லது நாளை மறுநாள்  தொகுதிப் பங்கீடு முடிவாகும் என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்பதை கூறியுள்ளோம். திமுக கூட்டணியில் அனைவரும் உள்ளோம் என்ற நோக்கில்தான் ராகுல் காந்தி பரப்புரை  செய்கிறார். மு.க.ஸ்டாலின்- ராகுல்காந்தி இணைந்து பரப்புரை மேற்கொள்வது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>