தேர்தல் பறக்கும்படை அதிரடி!: கடலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல்..!!

கடலூர்: கடலூரில் வாகன சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 51 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் யாரும் கொண்டுசெல்ல கூடாது. அவ்வாறு கொண்டுசெல்லப்படும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

9 சட்டமன்ற தொகுதிகளில் 27 பறக்கும்படை அமைக்கப்பட்டு வட்டாட்சியர் காலாவதி தலைமையில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை கடலூர் அருகே கங்கனாங்குப்பம் பகுதியில் புதுவையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்துமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் ராம்பிரசாத் என்பவரின் காரில் கணக்கில் வராத 51 லட்சம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராம்பிரசாத் மங்களூரில் தனியார் தொழிற்சாலை நடத்துவதாகவும் அதற்காக பணம் கொண்டுவரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் பணம் கொண்டுவரப்பட்டதற்கான உரிய ஆவணம் இல்லை என்ற காரணத்தினால் தேர்தல் பறக்கும்படையினர் 51 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். கடலூர் தாசில்தார் பலராமன் தலைமையில் இந்த விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories: