பிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..!!

டெல்லி: இந்தியாவில் மிகவும் பலமாக இருந்த பிரிட்டிஷ் அரசையே 74 ஆண்டுகளுக்கு முன்பு நாம் துரத்திவிட்டோம்,  பிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல என்று ராகுல்காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே திரண்டிருந்த பொதுமக்களிடமும், முத்தையாபுரத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் இடையேயும் பேசினார். தூத்துக்குடியில் பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, பின்னர் மாலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இதனையடுத்து, நெல்லையில் கல்லூரி பேராசிரியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அதில் அவர் பேசியதாவது: கல்வி முறைக்கு ஒரு கொள்கையை நாம் உருவாக்க வேண்டும் என்றால், அது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான உரையாடலிலிருந்து வர வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இது செய்யப்படவில்லை.

கல்வி என்பது பொருளாதார ரீதியில் வலுவானவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று நான் நம்பவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, ​​கல்விக்கான உதவித்தொகை வழங்குவதை அதிகப்படுத்துவோம். கல்வி, சுகாதாரத்தை ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>