வீடுகளுக்கு ‘குக்கர்’ பார்சல்

20 ரூபாய் டோக்கனை காட்டி ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டவர் டிடிவி.தினகரன். வெற்றி பெற்ற அடுத்த நாளில் இருந்து இதுவரையில் அவர் தொகுதி பக்கமே தலையை காட்டவில்லை என்பது அப்பகுதி மக்களின்  தொடர் புகாராக இருந்து வருகிறது. இதேபோல், தொப்பி சின்னத்திற்கு பிறகு அவருக்கு மிகவும் கைகொடுத்து பிரபலமான சின்னம் குக்கர். இந்த சின்னத்தை பெற அவர் பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டார். இதேபோல், அமமுகவிற்கு  சட்டமன்ற தேர்தலில் போட்டியிட குக்கர் சின்னத்தை கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.  மீண்டும் குக்கர் சின்னம் கிடைத்தது அமமுகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏப்ரல் 6ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதிமுகவினர் வேட்டி, சேலை, கிப்ட் பாக்ஸ்களை  வழங்கி வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

அதிமுகவினருக்கு இணையாக அமமுகவினரும் சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் படங்கள் அடங்கிய அட்டைபெட்டிகளுக்குள் குக்கர்களை வைத்து வீடுதோறும் வழங்கி வருவதாக  கூறப்படுகிறது. இதற்காக, மாவட்டம் தோறும் முதல்கட்டமாக 2 லட்சம் குக்கர்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாம். சிக்கல் நிறைந்த பகுதிகளில் இரவு நேரங்களில் இந்த குக்கர் பார்சல்கள் வீடுகளுக்கு சென்றுவிடுகிறதாம்.

Related Stories:

>