கோவை என்றால் கொள்ளைப்பிரியம்..!

கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு  பெரும் ஆளுமைகளும் இந்த சட்டமன்ற தேர்தலில் இல்ைல. கருணாநிதிக்கு, கோவை  என்றால் கொள்ளைப்பிரியம். தன்னை தாலாட்டிய தொட்டில் கோவை... என அவர் அடிக்கடி கூறுவார். அவருடைய  திரையுலக வாழ்க்கையும், மணவாழ்வும் துவங்கியது கோவை நகரில்தான். கோவை சிங்காநல்லூர் அரவாண் கோவில் மைதானம் அருகே  அவரும், எம்.ஜி.ஆரும் ஒரே அறையில் தங்கியிருந்த சரித்திரப்பெருமை இப்பகுதிக்கு உண்டு. ஆனால், கோவை தன்னை அரசியல்ரீதியாக ஆதரிக்கவில்லை என்ற வருத்தம்,  அவரிடம் இருந்துகொண்டே இருந்தது. அதை அவர், நேரடியாக  சுட்டிக்காட்டிய சம்பவங்கள், பகிர்வுகள் நிறையவே உள்ளன. உதாரணமாக, 2003-ம்  ஆண்டில்,  கலைஞர் எழுதிய ‘‘தொல்காப்பிய பூங்கா’’ நூல் வெளியீட்டு விழா,  கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அவர்  பேசிக்கொண்டிருந்தபோதே, திடீரென மயங்கி சரிந்துவிட்டார்.

உடனேமருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டார். சிறிது நேரம் சிகிச்சை பெற்று அறைக்கு திரும்பினார்.  அன்று இரவு கோவை சிவானந்தா காலனியில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில்பேசிய கருணாநிதி, அவருக்கே உரிய பாணியில், ‘இந்த கூட்டத்துக்கு கருணாநிதி வருவானா? வரமாட்டானா? என பார்க்கத்தான் இவ்வளவு கூட்டம் வந்துள்ளது, எனக்கு  ஓட்டு போடுவதற்கு இவ்வளவு கூட்டம் வரவில்லை, இதை நான் அறிவேன்’ என்றார். இந்த உருக்கமான பேச்சை கேட்டு, பொதுக்கூட்ட வளாகமே கப்-சிப்... என அடங்கியது. மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி, வழக்கம்போல் பேசி  முடித்துவிட்டுதான் கீழே இறங்கினார் கலைஞர்.

Related Stories:

>