தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் அவசர கதியில் ரோப்கார் சோதனை ஓட்டம்-இயந்திர கோளாறால் பாதியில் நின்றதால் பக்தர்கள் அதிர்ச்சி

குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர் மலையில் உள்ளது சிவ தலங்களில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரர் கோயில. இக்கோயிலில் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல 1017படிகள் ஏறி செல்ல வேண்டும் .இந்நிலையில் குடி பாட்டுக்காரர்கள் பொதுமக்கள் ரத்தினகிரீஸ்வர ரை தரிசிக்க வரும் பொழுது முதியவர்கள் சிறுவர்கள் மலை உச்சிக்கு செல்வது மிக சிரமமாக இருந்து வந்தது.

இந்நிலை கருதி அப்போதைய திமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கதிடம் பொதுமக்கள் பக்தர்கள் கம்பிவட ஊர்தி ரோப் கார் தேவை என கோரிக்கை விடுத்தனர்.கோரிக்கையை ஏற்ற திமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் இந்து அறநிலைத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு குளித்தலை தொகுதி அய்யர் மலைக்கு பக்தர்கள் கோரிக்கை ஏற்று ரோப் கார் வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார் அக்கோரிக்கையை முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் பரிந்துரை செய்து அதற்கான உத்தரவு பெறப்பட்டது அதன் பிறகு முதன்முதலில் இந்து அறநிலைய துறை சார்பில் ரூ 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து குடி பாட்டுக்காரர்கள்பக்தர்கள் வழங்கிய ரூ 2 கோடி ஆக மொத்தம் 4 கோடி நிதி பெறப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2.2.2011 அன்று அப்போதைய அறநிலைய துறை அமைச்சர் முத்துக்கருப்பன் தலைமையில்நடைபெற்றது.

ரோப்கார் பணி தொடங்கும் நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது அதேபோன்று அடிவாரத்திலும் கட்டிடம் கட்டப்பட்டு அடிவாரத்தில் இருந்து உச்சி மலைக்கு செல்லும் வகையில் ரோப் காருக்கான கம்பிகளும் வந்து சேர்ந்தன. இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்த பொழுது ரோப்கார் பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பணிகள் விரைந்து முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் கடந்த மாதம் விரைவாக பணி முடிக்க வேண்டும் என ரோப்கார் திட்ட பணியாளர்களிடம் கேட்டுக்கொணடது. அவர்களும் தற்பொழுது முடிவதற்கு சாத்தியக்கூறுு இல்லை. பல கட்ட சோதனைக்கு பிறகு தான் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட முடியும் என கூறினர். இருந்தாலும் சோதனை ஓட்டத்திற்கு தயார்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு சென்றார் கலெக்டர் மலர்விழி.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) ரோப் கார் சோதனை ஓட்டம் என அறிவித்திருந்தனர் இந்நிலையில் நேற்று மாலை திடீரென தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவித்ததால் கலெக்டர் மற்றும் இந்து அறநிலைய த்துறை அதிகாரிகள் அய்யர்மலை ரோப்கார் திட்டத்திற்கு சோதனைை ஓட்டம் தொடங்கினர். தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரோப்கார் பெட்டி இயந்திரக் கோளாறினால் பாதியிலேயே நின்றது. மீண்டும் பணியாளர்கள் சரி செய்த பிறகு சோதனைை ஓட்டம் நடைபெற்றது.

என்னதான் சோதனை ஓட்டம் அவசர கதியாக நடத்தினாலும் பொதுமக்கள் பயன்படுத்த முறையான பணிகள் முடிந்த பிறகு அறநிலைய துறை பொறியாளர்கள், அறநிலைய துறை ஆணையர், ரோப் கார் முழுமையான அறிக்கை சமர்ப்பித்த பின்னரே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என கூறப்படுகிறது.

Related Stories: