பணப்பட்டுவாடா புகார் மீது உரிய நடவடிக்கை: ரூ.50,000-க்கு அதிகமாக வைத்திருந்தால் ஆவணங்கள் காண்பிக்க வேண்டும்: தமிழக தேர்தல் அதிகாரி பேட்டி.!!!

சென்னை: டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். தொடர்ந்து, சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் 6000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளன. 50,000 ரூபாய்க்கு அதிகமாக பணம் வைத்திருந்தால் ஆவணங்கள் காண்பிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடா புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்ட மண்டல அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், செலவின குழுவினருக்கான பயிற்சி மார்ச்சில் தொடங்குகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். சட்டமன்ற தேர்தல் முடிவுகளுடன், கன்னியாகுமரி மக்களவை தொகுதி முடிவு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

Related Stories: