கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.!!!!

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கக்கோரிய மசோதா தமிழச சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசை  பாமகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்றப்பின் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம் பிடித்தது. ஆனால், வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு  தொடர்பாக அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால், அதிருப்தியில் இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் சட்டமன்ற தேர்தலில் தனித்துப்போட்டியிட முடிவு செய்தததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை வெளிப்படும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினரும் சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்தனர். ஆனால்  போராட்டத்தில் பங்கேற்க வந்த பாமகவினரை, போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர், சாலை மறியல் செய்ததோடு ரயில்களை வழி மறித்து அதன் மீது கற்களை வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு  நிலவியது.தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்வர் பழனிசாமியை சந்தித்து வன்னியர்களுக்கு 20% இட இதுக்கீடு வழங்குவது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.

இருப்பினும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், அதிருப்தியில் இருந்த ராமதாஸை சமரசம் செய்ய இரு அமைச்சர்கள் தொடர்ந்து அவரை சந்தித்து பேசினர். இதற்கிடையே, இன்று மாலை சட்டமன்ற தேர்தல்  தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. எனவே, தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க கோரிய மசோதா தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்டது.

உள் ஒதுக்கீடு மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டபேரவையில் தாக்கல் செய்தார். மசோதா குறித்து முதல்வர் அளித்த விளக்கத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% தனி ஒதுக்கீடு வழங்கவும்,  சீரதரபினருக்கு 7% தனி இடஒதுக்கீடு வழங்கவும் மசோதா வகை செய்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் இதர பிரிவினருக்கு 2.5% உள்ஒதுக்கீடு வழங்கவும் மசோதா வழிவகை செய்கிறது. வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு  தற்காலிகமானது, சாதிகள் குறித்த விவரம் சேகரிப்பு பணிக்கு பின் 6 மாதம் கழித்து மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். எம்பிசியில் உள்ள 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடு  செய்யப்படுகிறது. 7% உள்ஒதுக்கீட்டைப் பெறவுள்ள சீர்மரபினர் பிரவில் 68 உட்பிரிவுகள் உள்ளன என்றார். தொடர்ந்து, மசோதா ஒருமனதாக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>