தங்கவயல் நகரசபைக்கு உட்பட்ட வார்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தொகுதி எம்எல்ஏ

தங்கவயல்: தங்கவயல் நகர சபை வார்டுகளில் வசிக்கும் பொது மக்களிடம் தொகுதி எம்எல்ஏ ரூபகலா சசிதர் நேரில் சென்று வார்டுகளில் உள்ள அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தார்.  தங்கவயல் நகர சபை வார்டுகளான எண் 6,11,17,20, மற்றும் 21 ஆகிய வார்டுகளுக்கு நேரில் சென்ற எம்எல்ஏ பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். 6வது வார்டு பகுதி மக்கள் தங்கள் வார்டில் தெரு சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றனர். 11 வது வார்டில் மைசூர் ஹால் பகுதியில் இருந்து ராஜர்ஸ் கேம்ப் கல்லறை தோட்டம் வரை  செல்லும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளதால் அந்த சாலையை புனரமைக்க வேண்டும் என்று கோரினர்.  17வது வார்டில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் கூடுதலாக போர்வெல் அமைக்கவும், கழிவுகள் அடைத்து தேங்கி கொண்டிருக்கும் கழிவு நீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்,என்று வேண்டுகோள் விடுத்தனர்.  

20வது வார்டில், பவுரிலால் பேட்டை மேம்பாலத்தில் சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் அப்பகுதி வாசிகள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். சாலையை புனரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். விரைவில் பகுதி மக்களின் குறைகள் அனைத்தும் சரி செய்யப்படும் என்று உறுதியளித்த எம்எல்ஏ நகர சபை தலைவர் வள்ளல் முனிசாமி மற்றும் அதிகாரிகள் மக்களின் அடிப்படை வசதி குறைப்பாடுகளை தொடர்ந்து கண்டறிந்து செயல்பட வேண்டும், என்றும் வார்டு கவுன்சிலர்கள் வார்டு மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Related Stories: