தமிழகம், புதுச்சேரி தேர்தல் எப்போது? தேதி முடிவு செய்தது ஆணையம்

புதுடெல்லி: தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு, ஏற்கனவே தமிழகம் உட்பட தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில், இத்தேர்தலுக்கான ஏற்பாடுகள், தேர்தல் தேதிகளை இறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனை  நடத்தப்பட்டது. இதில், தமிழகம், கேரளா, புதுவை தேர்தல் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. இந்த  ஆலோசனை கூட்டம், இன்றும் நடக்கிறது. இதில், அசாம் மற்றும் மேற்கு வங்க தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில், தேர்தல் தேதிகளும் முடிவு செய்யப்படுகிறது. அதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.,

Related Stories:

>