சாத்தூரில் புதர்மண்டிய அரசு மருத்துவமனை-சுத்தப்படுத்த மக்கள் வலியுறுத்தல்

சாத்தூர் :  சாத்தூரில் புதிய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 சாத்தூரில் மெயின் ரோட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. பின்னர் அந்த மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் வெங்கடாசலபுரம் ஊராட்சியில் புதிய அரசு மருத்துவமனை கட்டப்பட்டது.

இந்த புதிய மருத்துவமனையில் அனைத்து விதமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. பழைய அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு மற்றும் ரத்த வங்கி செயல்பட்டு கொண்டு இருக்கிறது. மேலும் புதிய அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில் புதிய அரசு மருத்துவமனை வளாகத்தில் முட்புதர்கள் மற்றும் செடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் விஷ பூச்சிகள் அதிக அளவில் காணப்படுவதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மிகுந்த அச்சத்தில் இருக்கினறனர். எனவே புதிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories: