ஜெயலலிதா உடனான கலந்துரையாடல்கள் என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன : நினைவலைகளை பகிர்ந்த பிரதமர் மோடி!

டெல்லி : ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளிக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஜெயலலிதா செலுத்தியுள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர். அத்துடன் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா சிறப்பு மலரை முதல்வரும் துணை முதல்வரும் வெளியிட உள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவரின் பிறந்த நாள் இந்தாண்டு முதல் அரசு விழாவாகவும், பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவர் மக்கள் சார்பு கொள்கைகள் மற்றும் நலிந்தவர்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக பரவலாக போற்றப்படுகிறார்.ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளிக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஜெயலலிதா செலுத்தியுள்ளார். ஜெயலலிதா உடனான கலந்துரையாடல்கள் என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: