மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, தட்டு போன்ற பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சிக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, மாவட்ட கலெக்டர் லலிதா நடவடிக்கை எடுக்க நகராட்சி துறையினருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் சுப்பையா மேற்பார்வையில் நகராட்சி சுகாதார அலுவலர் ராமையன் தலைமையில், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு, பேருந்து நிலையம், கூரைநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் ஒன்றரை டன் எடை கொண்ட பிளாஸ்டிக் பொருள்களான கேரி பேக், டீ கப், பிளாஸ்டிக் மிக்ஸ்டு பை ஆகியவற்றை மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நகராட்சி கிடங்கில் வைக்கப்பட்டது.

Related Stories: