ரெடியா இருங்க... 591 பேச்சாளர் இருக்காங்க...

தேர்தல் கமிஷன், தமிழகத்தின் ஸ்டார் பேச்சாளர்களாக 591 பேர் பட்டியலை தயார் செய்துள்ளது. இந்த பட்டியலில் மேலும் சிலரை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சி அமைச்சர்கள் அனைவரும் பேச்சாளர் பட்டியிலில் சேர்க்கப்பட்டனர். பேச்சாளர் பட்டியல் விவரங்கள் மாவட்டம் வாரியம் தேர்தல் கமிஷன் அனுப்பி வைத்துள்ளது. இதில் மத்திய அரசின் பொறுப்பில் இருப்பவர்கள், வெளி மாநில பேச்சாளர்கள் விவரங்கள் சேர்க்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவிக்காத நிலையிலும் முக்கிய பேச்சாளர்களின் பேச்சு விவரங்கள் சேகரிக்கும் பணி நடக்கிறது. இது தேர்தல் நடத்தை விதிகள் அமலாகும்போது ஏதாவது சர்ச்சை, விவகாரத்தை ஏற்படுத்துமா என தேர்தல் பிரிவினர் யோசித்து வருகின்றனர். பேச்சாளர்கள் வந்தால் அது தொடர்பாக தேர்தல் பிரிவினருக்கு தகவல் தெரிவித்து முன் அனுமதி பெற்று பொது இடங்களில் பிரசாரம் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: