இந்தியாவிலிருந்து சுத்திகரித்து அனுப்பப்படும் பெட்ரோல் நேபாளத்தில் இருந்து கடத்தல்: விலை லிட்டருக்கு 22 வரை குறைகிறது

புதுடெல்லி:  நாடு முழுவதும் தற்போது பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல்  92.59-க்கும், டீசல் விலை லிட்டர் 85.98க்கும் விற்பனையாகிறது.  ராஜஸ்தான், மபி.யில் பெட்ரோலின் விலை செஞ்சுரி அடித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை  90க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில்  இருந்து பெட்ரோல் கடத்தி வரப்பட்டு, உள்ளூர் பெட்ரோல் பங்க்குகளைக் காட்டிலும் லிட்டருக்கு ₹ 22 குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கிறது என்றால் மக்கள் விடுவார்களா? இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகையில்,  நேபாளத்தில் இருந்து கடத்தி வரப்படும் பெட்ரோல் சாலை ஓரங்களில் டேங்கர் மூலம் விற்கப்படுவதால், பெட்ரோல் பங்க்குகளின் விற்பனையில் நாளொன்று 1,200 முதல் 1,800 லிட்டர் வரை குறைந்துள்ளது,’’ என தெரிவித்தனர்.

இந்தியாவில் இருந்தே சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை நேபாளம் கொள்முதல் செய்து, அந்நாட்டில் விற்பனைச் செய்கின்றது. இருப்பினும், அந்நாட்டில் இந்தியாவைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையில் ரூ.70.62க்கு  பெட்ரோல் விற்பனையாகிறது. அதே போல, பிற அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தானிலும் கூட பெட்ரோல், டீசல் குறைந்த விலையிலேயே விற்கப்படுகிறது.இதற்கு முன்பு, கடந்த 2018லும், இந்தியாவில் பெட்ரோல் விலை  லிட்டருக்கு 85ஐ தாண்டிய போது, நேபாளத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல்  65, டீசல்  55க்கு விற்பனையாது. அப்போதும், இதே போல் கடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: