தேனி என்ஆர்டி ரோட்டில் சாலைப் பள்ளத்தால் விபத்து அபாயம்

தேனி: தேனி நகர் என்ஆர்டி ரோட்டில் உள்ள மெகா பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. தேனி நகரின் முக்கிய பகுதியாக என்ஆர்டி நகர் உள்ளது. இந்த நகரின் அருகே சிவராம் நகர், சமதர்மபுரம், சிவாஜி நகர், கே.ஆர்.ஆர்.நகர், பாரஸ்ட் ரோடு ஆகிய பகுதிகளுக்கு பெரியகுளம், தேனி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்வதற்கான பிரதான சாலையாக என்ஆர்டி நகர் சாலை உள்ளது. சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகம் இருக்கும்.

இந்த சாலையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்துக்கு முன் மெகா பள்ளம் உருவாகியுள்ளது. சாலையின் மேடான பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு விரைவாக வரும் வாகனங்கள் இந்தப் பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் சாலையில் உருவாகியுள்ள மெகா பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: