பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறார் மம்தா

கொல்கத்தா: மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க பிரதமர் தலைமையில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர்கள், சில மத்திய அமைச்சர்கள், மூத்த மத்திய அரசு அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்ட நிதி ஆயோக் குழு உருவாக்கப்பட்டது. இதன், முதல் கூட்டம் கடந்த 2015ல் பிப்ரவரி 8ம் தேதி நடந்தது.  ஆனால், இக்குழுவினால் மாநிலங்களுக்கு தேவையான நிதி அளிக்கும் அதிகாரம் இல்லாததால், இதுவொரு பயனற்ற முயற்சி என்று மேற்கு வங்க முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் 6வது நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் விவசாயம், உள்கட்டமைப்பு, உற்பத்தி, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தை புறக்கணிக்க மேற்க வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிக்க இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: