ஸ்ரீரங்கபட்டணா அரங்கநாதசுவாமி கோயிலில் நாளை ரதசப்தமி விழா

மண்டியா: சூரியன்  திசை மாறும் தினத்தை ரதசப்தமி தினம் என்று இந்துக்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள். இந்நாளில் நதியில் மூழ்கி நீராடி பின் சூரிய  பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்வார்கள். கஷியப்பா  மகரிஷி-அதிதிதேவி ஆகியோரின் மகனாக சூரிய பகவான் பிறந்தார், இந்நாளை சூரிய  ஜெயந்தி என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.

சூரியன் மகர ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்வதை வடக்கு திசை புண்ணியம் காலம் என்று அழைக்கிறார்கள். அதன்படி ரதசப்தமி நாளான நாளை ஸ்ரீரங்கபட்டணா அரங்கநாதசுவாமி கோயிலில்  சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

Related Stories: