பிரதமர், ஆளுநர் அலுவலக பெயர்களை பயன்படுத்தி ரூ.100 கோடி மோசடி.: தந்தை - மகன் உள்பட 3 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி

டெல்லி: பிரதமர், ஆளுநர் அலுவலக பெயர்களை பயன்படுத்தி ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்ட கும்பலிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்தும் ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்ட புகார்கள் காவல்துறை டிஜிபிக்கு அனுப்பப்பட்டு அவரது உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது மைசூரைச் சேர்ந்த மகாதேவ் (54), அவரது மகன் அங்கித் (29), ஓசூரை சேர்ந்த ஓம் (34) ஆகிய மூன்று பேரை சிபிசிஐடி காவல் துறை அதிரடியாக கைது செய்தது. இவர்களை பெங்களூரில் வைத்து தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.  

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், எம்பி சீட் மற்றும் மத்திய அரசு பணிகளை வாங்கி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரதமர் மற்றும் ஆளுநர் அலுவலகங்களில் இருந்து இ - மெயில் அனுப்பவது போல மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது.

இந்தநிலையில் பெங்களூருவை சேர்ந்த தந்தை - மகன் உள்பட 3 பேரை சிபிசிஐடி 6 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை முடிவில் தான் மோசடி குறித்த முழு விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories: