கரோலில் ஆக்ரோஷத்துடன் காணப்படும் ஆட்கொல்லி யானை-தொடர் கண்காணிப்பில் வனத்துறை

ஊட்டி : பந்தலூர் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி யானை கரோல் எனப்படும் மரக்கூண்டில்  அடைக்கப்பட்ட நிலையில் ஆக்ரோஷம் குறையாமல் கரோலில் இருந்து வெளியே வர  முட்டி மோதி வருகிறது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார  பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேரை காட்டு  யானை ஒன்று தாக்கிக் கொன்றது. இந்த யானையை உடைந்த கொம்பன் மற்றும் சங்கர்  என்ற பெயர்களில் பொதுமக்கள் அழைத்து வந்தனர்.

இந்த யானை 3 பேரை கொன்றதை  உறுதி செய்த வனத்துறையினர் ஆப்ரேஷன் புரோக்கன் டஸ்கர் என்ற பெயரில் மயக்க  மருந்து செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், இந்த யானை கேரள  வனப்பகுதிக்குள் சென்றால் பிடிக்கும் பணி தாமதமடைந்தது. இதைத்தொடர்ந்து, இம்மாத  துவக்கத்தில் யானை நீலகிரிக்குள் வந்த நிலையில் மதம் பிடித்து இரண்டு மாதங்களாக போக்கு காட்டி வந்தது. வனத்துறையினர் கடந்த 12ம்  தேதி சேரம்பாடி வனப்பகுதியில், துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி  பிடித்தனர்.

பிடிபட்ட யானை லாரியில் ஏற்றி முதுமலையில் உள்ள அபயரண்யம்  யானைகள் முகாமிற்கு கொண்டு கரோல் எனப்படும் பிரத்யேக மரக்கூண்டில்  அடைக்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக கரோலை விட்டு வெளியேற இடைவிடாது முயன்று  வருகிறது. இதனால், 24 மணி நேரமும் யானையை கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை  ஊழியர்கள் கூறுகையில்,`கரோலுக்குள் அடைக்கும் போதே ெராம்ப ஆக்ரோஷமாக தான்  இருந்தது. கடந்த 4 நாட்களாக கரோலில் இருந்து வெளியேர அதனை முட்டி மோதிக் கொண்டே  இருக்குகிறது. கரோலில் உள்ள மர தடுப்புகளை இடித்து கொண்டே இருக்கிறது’ என்றனர்.

Related Stories: