வாணியம்பாடி சுங்கச்சாவடியில் போலீஸ் பாதுகாப்பு பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூல்-வாகன ஓட்டிகள் கடும் அவதி

வாணியம்பாடி : நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில்  உள்ள சுங்க சாவடிகளில் நேரடி சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சுங்க சாவடிகளில் பாஸ்டேக் முறையை  மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் பாஸ்டேக் முறை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நடைமுறைக்கு வந்தது. மேலும், பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூல் செய்ய உத்தரவிடப்பட்டது.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்க சாவடியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படுத்தப்பட்டது. மேலும், பாஸ்டேக் இல்லாமல் வந்த வாகனங்கள் தனி தடத்தில் அனுமதிக்கப்பட்டு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.  மேலும், சுங்கச்சவாடி ஊழியர்கள் பாஸ்டேக் முறையை பயன்படுத்தி இருமடங்கு கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க அனைத்து வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து, இருமடங்கு கட்டணம் செலுத்துவதை தவிர்க்க சுங்க சாவடி அருகே பாஸ்டேக்  பொருத்த அமைக்கப்பட்டிருந்த இடத்தில் தங்கள் வாகனங்களுக்கு பாஸ்டேக் பொருத்திக்கொள்ள வாகன ஓட்டிகள் ஆர்வம் காட்டினர். மேலும், சுங்கச்சாவடியில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: