திரிபுரா முதல்வர் பேச்சுக்கு நேபாளம் கண்டனம்

அகர்தலா: நேபாளத்திலும் இலங்கையிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற திரிபுரா மாநில பாஜக முதலமைச்சர் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிபுரா முதல்வர் விப்லப் தேவ் பேச்சு ஆட்சேபத்துக்கு உரியது என்று இந்தியாவுக்கான நேபாள தூதர் நிலம்பர் ஆச்சார்யா கூறியுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலர் அரிந்தம் பக்க்ஷியை தொடர்பு கொண்ட நேபாள தூதர் தமது நாட்டின் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்து விட்டதாக அமித்ஷா கூறியதாக விப்லப் தேவ் பேசினார். அடுத்து எஞ்சியுள்ள நேபாளத்திலும் இலங்கையிலும் பாஜகவை தொடங்கி ஆட்சி அமைக்க உள்ளதாக அமித்ஷா கூறியதாக பேசினார். நேபாளம், இலங்கையில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று திரிபுரா முதல்வர் விப்லப் தேவ் பேசியது தான் சர்ச்சை ஆகியுள்ளது.

Related Stories: