இலங்கை தடையால் ₹500 கோடி அளவில் தேக்கம் கையில் கருவாடுடன் மீனவர் போராட்டம்

ராமேஸ்வரம் : தூத்துக்குடி துறைமுகத்தில் தேங்கியிருக்கும் ரூ.500 கோடி மதிப்பிலான கருவாடுகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் கருவாடுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இலங்கையில் தற்போது கருவாடு இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் உயர்ரக கருவாடுகள் தேங்கியுள்ளன. இதன் காரணமாக கருவாடு ஏற்றுமதியாளர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். துறைமுகத்தில் தேங்கியுள்ள கருவாடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேஸ்வரம் நகராட்சி பேருந்து நிலையம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மீனவர் தொழிற்சங்கம் தாலுகா துணைத்தலைவர் பிச்சை தலைமை வகித்தார். மாநில தலைவர் முருகானந்தம், செயலாளர் செந்தில்வேல், மாநிலக்குழு உறுப்பினர் வடகொரியா உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கைகளில் கருவாடு ஏந்தி கோஷமிட்டனர்.

Related Stories: