நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உயிர் உரங்கள் உற்பத்தி பயிற்சி

மதுராந்தகம்: தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் உயிர் உரங்கள் உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி செங்கல்பட்டு மாவட்டத்தில் லத்தூர், திருக்கழுக்குன்றம், காட்டாங்கொளத்தூர் வட்டாரங்களில் கடந்த 11, 12ம் தேதிகளில் நடந்தன. இப்பகுதிகளில், வட்டாரத்திற்கு ஐந்து குழுக்கள் வீதம் 15 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு வேளாண்மை துறை நீர்வள நிலவள திட்டம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள தேசிய பயிர் பாதுகாப்பு மேலாண்மை நிறுவனம்  இணைந்து இந்த எளிய முறையிலான பயிற்சிகளை வழங்கினர்.இந்த பயிற்சியின்போது துணை கலெக்டர் பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவீந்திரா, வேளாண்மை இணை இயக்குனர் சம்பத்குமார், வேளாண்மை அலுவலர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு குழுக்கள் சிறப்பாக செயல்பட அறிவுரை வழங்கினர்.

Related Stories: