சபரிமலையில் மாசி மாத பூஜை துவக்கம்: தினமும் 5,000 பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகள் நேற்று துவங்கியது. சபரிமலை  ஐயப்பன் கோயில் நடை மாசி மாத பூஜைகளுக்காக நேற்று  முன்தினம் திறக்கப்பட்டது. மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி, கோயில் நடையை திறந்து தீபாராதனை  நடத்தினார். அன்று பூஜைகள் எதுவும் நடக்கவில்லை. நேற்று அதிகாலை 5.20  மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மகாகணபதி ஹோமத்துடன்  பூஜைகள் தொடங்கின. நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு  அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அபிஷேக நெய்யை பக்தர்கள் நேரடியாக  சன்னதியில் வழங்க அனுமதி இல்லை. உதயாஸ்தமன பூஜை, படிபூஜை, கலசாபிஷேகம் போன்ற  சிறப்பு பூஜைகள், களபாபிஷேகம், அர்ச்சனை, கணபதி ஹோமம், புஷ்பாஞ்சலி, பகவதி  சேவை போன்ற வழிபாடுகளும் நடக்கின்றன. வரும் 17ம் தேதி வரை பூஜைகள்  நடக்கின்றன.

இணையதள மெய்நிகர் வரிசையில் (விர்ச்சுவல் கியூ)  முன்பதிவு செய்த 5,000 பேருக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி உண்டு.  அவர்கள் ஆர்டி-பிசிஆர் அல்லது ட்₹நாட் கொரோனா பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். நிலக்கல் மற்றும் பம்பையில்  இதற்கான பரிசோதனை வசதிகள் உள்ளன.

Related Stories: