ஏழைகளுக்கானது, வளர்ச்சிக்கானது பணக்காரர்கள் பட்ஜெட் அல்ல: நிர்மலா சீதாராமன் பதில்

புதுடெல்லி:நாடா ளுமன்றத்தில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  கடந்த 1ம் தேதி  மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் மாநிலங்களவையில் நடந்தது. இதற்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அளித்த பதிலில் கூறியதாவது:  மத்திய பட்ஜெட்டில், நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்கும் நோக்கில் வலுவான நிதி தொகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   ஏழைகளுக்காக அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதில் குறை கண்டுபிடிப்பதை தற்போது எதிர்க்கட்சிகள் வழக்கமாக்கி கொண்டுள்ளன. அரசு முதலாளித்துவ நண்பர்களுக்காக மட்டுமே செயல்படுவதாக கூறுகின்றன.பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.67 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப் பட்டுள்ளன.  2.67 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பி 2,11,192 கி.மீ. தூரத்துக்கு கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்கள் பணக்காரர்களுக்கானதா?

சாலை அமைத்தல், விவசாயம், வீடு, கல்வி உதவித்தொகை, இலவச மின்சாரம், இலவச கேஸ் இணைப்பு, இலவச உணவு தானியம் என ஏழைகளுக்காக மத்திய அரசு எதை செய்தாலும், அரசு பெரும் முதலாளிகளுக்காக மட்டுமே செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தவறாக கூறுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

மக்களவை இன்று 10 மணிக்கு கூடும்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலங்களவை காலை 9 மணிக்கு கூடி மதியம் 2க்கு முடிகிறது. மக்களவை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடத்தப்படுகிறது. இந்நிலையில், மக்களவையில் கேள்வி நேரத்துக்கு பின் சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று கூறுகையில், மாநிலங்களவை வரும் மார்ச் 8ம் தேதி மீண்டும் கூட்டப்பட உள்ளது. இதனால், மக்களவை வழக்கமான மாலை 4 மணிக்கு பதிலாக, நாளை (இன்று) காலை 10 மணிக்கு கூட்டப்படும்,’’ என்றார்.

Related Stories: