தமிழகம், புதுவையில் ஒரே நேரத்தில் தேர்தல்

புதுச்சேரி: ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்’ என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதுதொடர்பாக புதுச்சேரியில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரியில் கடந்த 11ம் தேதி மாலை அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். எனவே, தமிழகம்-புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, வெளிநாட்டு இந்தியர்களுக்கு ஆன்லைனில் வாக்குரிமை தருவது, வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை சரிசெய்வது ஆகிய கோரிக்கைகளை அரசியல் கட்சித்தலைவர்கள் முன்வைத்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒருங்கிணைந்து இருப்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும். அதனால் தமிழகம், புதுவையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். தேர்தலில், வேட்பாளர் செலவுத்தொகை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.22 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளத என்றார்.

Related Stories: