அதிக சீட்டுக்கு ஆசைப்பட்டு பாஜ அடிக்குது ‘ஜிங்...ஜாங்...’

அதிமுக கூட்டணியில் அதிக சீட் பெற பா.ஜ திட்டம் வகுத்துள்ளது. இதற்காக முதல்வரை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுகிறது பாஜ. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருகிறது. இதையொட்டி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அதிக சீட் பெற முயற்சி செய்து வருகின்றன. இதற்காக பா.ஜ. பல்வேறு வகையில் காய்களை நகர்த்தி வருகிறது. நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் கீழூரில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பா.ஜ.தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பா.ஜ. மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான இல.கணேசன் சூசகமாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டுக்கு முன் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது பா.ஜவிற்கு 23 சீட் ஒதுக்கப்பட்டது.

அதில் இரண்டை வைகோவிற்கு கொடுத்து விட்டோம். நாங்கள் 21 தொகுதியில் போட்டியிட்டு, 4 தொகுதியில் வெற்றி பெற்றோம் தற்போது பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியால் பா.ஜ. செல்வாக்கு அதிகரித்துள்ளது’ என்று கூறியதுடன், ‘எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான். தேர்தலில் அதிமுக-பா.ஜ. கூட்டணி அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவார். எடப்பாடி பழனிச்சாமி தனது உழைப்பால், திறமையால், மிகச்சிறந்த ஆட்சி நடத்தி வருகிறார்’ என ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியுள்ளார். அதிக சீட் பெற திட்டமிட்டுள்ளதன் முன்னோட்டமாகவே இது கருதப்படுகிறது.

Related Stories: